நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி, 45 ரன்கள் சேர்த்ததன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
நேப்பியரில் இன்று நடந்த முதலாவாது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. வெயில் காரணமாக இலக்கு 49 ஓவர்களில் 156 என மாற்றப்பட்ட நிலையில், 34.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்த போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டு, 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அவரின் சராசரி 60 ரன்களை எட்டியிருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இருந்தபோதிலும், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரத்து 430 ரன்களை எட்டி மே.இ.தீவுகள் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடித்தார்.
லாரா 299 ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 405 ரன்கள் சேர்த்து 10-வது இடத்தில் இருந்தார். இப்போது கோலி அவரை முறியடித்து, 10 ஆயிரத்து 430 ரன்கள் சேர்த்து லாராவை பின்னுக்கு தள்ளி 10-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த மைல்கல்லை கோலி தனது 220 போட்டிகளில் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் 5-வது வீரராகவும், அதிகபட்ச ரன்கள் குவித்தவர்களில் சர்வதேச அளவில் 10-வது வீரராகவும் கோலி உள்ளார்.
தலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 300 ரன்களை எடுப்பார்கள் என நினைத்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடர்பாக பேசிய கோலி, “எங்களது சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று. பந்துவீச்சில் இதைவிட சிறப்பான ஒன்றை வெளிப்படுத்த முடியாது. நான் டாஸை இழந்தபோது, எப்படியும் நியூஸிலாந்து 300 ரன்கள் அடித்துவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அதில் பாதி இலக்கான 150-களிலேயே அவுட் ஆகியது சிறப்பானது. பந்து வீசுதற்கு முன்பு ஷமி சில நுணுக்கங்களை சொன்னார். இப்படி ஒரு வேகப் பந்துவீச்சை வைத்துக்கொண்டு எந்த அணியையும் மடக்கிவிடலாம் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துவிட்டது.
சுழற்பந்து வீச்சாளர்களின் செயல் மிக அருமையானது. ஏனென்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது தான் பிட்ச் சரியான நிலையை அடைந்தது. ஆனால் அதற்கு முன்பே நமது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திவிட்டனர். ஷிக்கர் தவானை இங்கு குறிப்பிட்டு கூறி ஆக வேண்டும். வெயிலால் இடைவேளை எடுத்தபோது, விரைவாக போட்டியை முடித்துவிடுகிறேன் என அவர் கூறினார். தவான் ஃபார்மில் இருந்தால் பயங்கரமான (சிறப்பான) வீரர்” என்றார்.
முன்னதாக, இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 157 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் மட்டும் 64 (81) ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 75 (103) மற்றும் கேப்டன் கோலி 45 (59) ரன்கள் எடுத்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி தேர்வு செய்யப்பட்டார்.வ்