தளபதி கோஹ்லி எப்பவுமே மாஸ் தான்; தல தோனி சொல்கிறார் !!

தளபதி கோஹ்லி எப்பவுமே மாஸ் தான்; தல தோனி சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி கிரிக்கெட் ஜாம்பவான்கள் வரிசையில் எப்பொழுதோ இணைந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி

இங்கிலாந்து அணியுடன் 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் இந்திய கேப்டன் கோலி தவிர, மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதிக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து விமர்சித்த, சஞ்சய் மஞ்ரேக்கரை இந்திய ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்பவான் அந்தஸ்தை ஏற்கனவே இந்திய கேப்டன் விராட் கோலி அடைந்துவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தோனி கூறுகையில், ‘விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அவர் ஏற்கனவே ஜாம்பவான் அந்தஸ்தை அடைந்து விட்டார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அம்பயரிடம் இருந்து பந்தை பெற்றதுபவுலிங் பயிற்சியாளரிடம் கொடுக்கத் தான் வாங்கினேன். ’ என்றார்.

கோஹ்லி நம்பர் 1 இடத்திற்கு தகுதியானவர்;

கோஹ்லி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது;

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற விராத் கோஹ்லிக்கு அனைத்து தகுதியும் உள்ளது. அணியை தன் தோளில் சுமந்து தனி ஆளாக போராடி வருகிறார். முதல் போட்டியில் விட்டதை இரண்டாவது போட்டியில் நிச்சயம் செய்வார். மேலும், நான் அவருக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை சமாளிக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளேன் எனவும் கூறினார்.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்சில் தனி ஒருவராக இருந்து 149 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இரண்டாவது இன்னிங்சிலும் அதேபோல நிகழ்ந்தது. கோஹ்லி மட்டுமே 51 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றினர். இறுதியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியசாத்தில் முதல் போட்டியை இழந்தது.

Mohamed:

This website uses cookies.