தம்பி நீ வெறும் அச்சாரம், அவர்தான் ஆணிவேர்! தோனியை விட்டுவிட்டு இரண்டு கேப்டன்களுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் வீரர்!

தம்பி நீ வெறும் அச்சாரம் அவர்தான் ஆணிவேர் தோனியை விட்டுவிட்டு இரண்டு கேப்டன் களுக்கு புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்தியதில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்திய அணி 1999இல் பிக்சிங் பிரச்சனையில் மாட்டி மிகப் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி நடுநடுங்கிப் போய் இருந்தது. அப்போது 26 வயதான இளம் வீரர் சவுரவ் கங்குலி, அணியை தலைமை ஏற்று நடத்தினார் .

தலைமை ஏற்றது மட்டுமல்லாமல் அணியை ஆக்ரோசமாக வழிநடத்தி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் எப்படி இந்திய அணி வெல்வது என காட்டினார். வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள் யுவராஜ் சிங் ,மகேந்திரசிங் தோனி, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆசிஸ் நெஹரா போன்ற பல இளம் வீரர்கள் இவரது தலைமையில் அறிமுகமாகி ஜொலித்தனர்.

தற்போது இருக்கும் விராட் கோலியும் அப்படித்தான் அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தி வருகிறார். வெளிநாடுகளில் பல போட்டிகளை வெல்கிறார். இவரது தலைமையில் இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது. இருந்தாலும் கடந்த இருபது வருடங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வளர்ச்சிக்கு கங்குலி தான் அச்சாரமாக இருந்தார் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு  கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்… நான் சவுரவ் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன், வெளிநாட்டு வீரர்களை பார்த்துக் கொண்டிருக்காமல் தன் அணிக்குள் இருக்கும் வீரர்களையே ஆக்ரோசமாக விளையாடச் செய்து வெற்றிகளை பெற்று கொடுத்தவர்/ அப்போதெல்லாம் இந்திய அணி வெளிநாடுகளில் நன்றாக ஆடாது என்ற ஒரு கூற்றும் இருந்துகொண்டே இருந்தது,இந்தியாவில் நன்றாக விளையாடி னார்கள் ஆனால் வெளிநாடுகளில் செல்லும் போது சரியாக ஆடவில்லை அப்போதுதான் சௌரவ் கங்குலி அறைக்குள் வந்தார் அச்சாரமாக அணியை தூக்கி நிறுத்தினார் ராகுல் டிராவிட் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இவரது தலைமையில் பட்டையைக் கிளப்பினார்கள் தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலியும் இதையேதான் செய்கிறார் வெளிநாடுகளில் பட்டையை கிளப்புகிறது இந்திய அணி இப்போது இருக்கும் விராட் கோலி மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் இதற்கெல்லாம் காரணம் சௌரவ் கங்குலி தான் அவர் தான் இதற்கு அச்சாரம் விட்டது என்று கூறியுள்ளார் டேவிட் ஆனால் இடையில் வந்து பல கோப்பைகளை தட்டிய மகேந்திர சிங் தோனி விட்டு விட்டார் இவர்

 

Mohamed:

This website uses cookies.