சர்சையில் சிக்கிய விராட் கோலி; நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ !!

விராட் கோலி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்திருக்கிறார் விராட் கோலி குறித்து பிசிசிஐ நிர்வாகி பேட்டி.

அடுத்த சில தினங்களில் தென் ஆப்ரிக்காவிற்கு செல்லும் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது இந்திய அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது..

ஆனால் விராட் கோலி விடுமுறை எடுப்பது குறித்து பிசிசிஐயிடமோ, சௌரவ் கங்குலி இடமோ அல்லது பிசிசிஐயின் செகரட்டரி ஜெய்ஷாவிடமோ எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற சர்ச்சை தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐயின் நிர்வாகி ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, விராட் கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்க வில்லை என்றால் அது சம்பந்தமாக சவுரவ் கங்குலி இடமோ அல்லது இந்திய கிரிக்கெட் அணியின் செகரட்டரி ஜெய்ஷா விடமும் நிச்சயம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும் ஒருவேளை ஏதாவது இக்கட்டான சூழ்நிலை காரணமாகவும் எதிர்பாராத சம்பவம் காரணமாகவும் தகவல் அளிக்காமல் சென்றால் அது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது.

ஆனால் தன் மனைவி மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று விடுமுறை எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது சம்பந்தமாக நிச்சயம் சம்பந்தப்பட்ட நிர்வாகியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த நிர்வாகி தெரிவித்திருந்தார்.

தற்போது ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கியதன் காரணமாகவே விராட் கோலி இவ்வாறு செய்கிராரோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் ஏற்படுகிறது என்றே கூறலாம்.

 

Mohamed:

This website uses cookies.