பேட்டிங் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு விரலில் காயம் ஏற்பட்டது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவை நாளை மறுதினம் (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கேப்டன் விராட் கோலி சவுதம்டனில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தாக்கி வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
அணியின் உடல்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹட் வலியை குறைக்க அவரது விரலில் ‘ஸ்பிரே’ அடித்தார். பிறகு விரலை சுற்றி ‘டேப்’ ஒட்டப்பட்டது. காயம் பயப்படும் வகையில் இல்லை என்றும், அவர் நன்றாக இருப்பதாகவும் அணியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
என்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அளித்த பேட்டி ஒன்றில் தன்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மிக வேகப்பந்துவீசும் அவர், 8 சர்வதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். ஆனால் 2017 டிசம்பருக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீசவில்லை. பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், இப்போது பந்துவீச்சுப் பற்றி பேசியுள்ளார்.
‘’2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரின்போது, எம்.எஸ்.தோனியிடம், என்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும், வீசவா? என்று கேட்டேன். சரியென்றார். பந்துவீச ரெடியாகும்போது, பவுண்டரி லைனில் இருந்த பும்ரா, ‘இது ஒன் னும் காமெடியில்ல, சர்வதேச போட்டி’ என்று கத்தினார். அதில் இருந்து பந்துவீசுவதை நிறுத்திவிட்டேன். அணியில் என் பந்துவீச்சின் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. ஆனால், என்னாலும் சிறப்பாக பந்துவீச முடியும்.
ஆரம்பத்தில் டெல்லி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றபோது, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்டைலை பின்பற்றினேன். பின்னர் அவருடன் விளையாடியபோது, இந்த கதையை சொன்னதும் அவர் சிரித்தார்’’ என்று தெரிவித்துள்ளார் விராத் கோலி!