பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களை ஊக்குவிப்பதில் மிக சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்களான இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இஷன் கிஷன் இந்தியாவுக்காக தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். பின் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்திக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் பங்கேற்க முடியவில்லை அவருக்கு பதிலாக இந்திய அணியின் மற்றுமொரு இளம் வீரரான சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரும் யாரும் எதிர்பாராத வண்ணம் தான் அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுபற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா கூறியதாவது, இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் மிக சிறப்பாக விளையாடினார் என்று தனது பாராட்டு தெரிவித்தார் மேலும் அவர் கூறியதாவது இவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது என்னுடைய பார்வையில் நவீன காலத்து வீவ் ரிச்சர்ட்ஸ் விராட் கோலி தான் என்று இந்திய அணி கேப்டனை வெகுவாக பாராட்டியுள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி 73 ரன்கள் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராஜா, இஷான் கிஷன் பற்றி கூறியதாவது, இஷன் கிஷன் ஒரு மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் ஆஃப் மற்றும் லெக் சைடில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார், மேலும் இவர் பந்துகளை சிக்ஸர்களை நோக்கி அனுப்புவதில் கெட்டிக்காரராக திகழ்கிறார் என்று பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் இந்திய அணி நிர்வாகம் பற்றி கூறியதாவது, இந்திய அணி நிர்வாகம் புதிய இளம் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் மிக அருமையாக செயல்படுகிறது, ஐபிஎல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களின் திறமை வெளிக்கொண்டு வருவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.