இந்திய அணிக்கு இன்னொரு கேப்டன் வேண்டும்? – மீண்டும் வாயவச்சிகிட்டு சும்மா இருக்காத மஞ்ச்ரேக்கர்!

இந்திய அணிக்கு இன்னொரு கேப்டனா? – மீண்டும் வாயவச்சிகிட்டு சும்மா இருக்காதா மஞ்ச்ரேக்கர்!

இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்கள் வேண்டுமா என்பது குறித்து கருத்தினை தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி அரையிறுதியுடன் வெளியேறியது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை இதுவரை கைப்பற்றவில்லை என்பதால் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு மட்டும் வேறொரு கேப்டன் நியமிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு பலரும் ஆலோசனை தெரிவித்து வந்தனர்.

ஆனால், பிசிசிஐ இதற்க்கு செவிசாய்க்காமல் அப்படியே விட்டுவிட்டது. அணி நிர்வாகமும் விராட்கோலி அனைத்துவித போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்க சம்மதம் தெரிவித்ததால், அதன் பிறகு வெவ்வேறு கேப்டன் என்கிற ஆலோசனை தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு அணியும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரரை கேப்டனாக நியமிக்க விரும்புவர். இந்திய அணிக்கு அது கிடைத்திருக்கிறது. அதனால், தற்போது கேப்டன் பொறுப்பை வெவ்வேறு வீரருக்கு பிரித்துக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

தற்போதைய நிலையில் மூன்று வடிவிலும் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியை கேப்டனாக பெற்றுள்ளீர்கள். அதனால் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் அதற்கான நேரம் வரும். அப்போது பிரித்து கொடுப்பதை எண்ணலாம். ஐசிசி கோப்பைகளை வெல்வதற்கு விராட்கோலி தகுதியானவர். வரும் காலங்களில் நிச்சயம் இந்திய அணிக்காக அவர் அதனை செய்துகாட்டுவார்.” என்றார்.
மேலும் பேசிய அவர், விராட்கோலிக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஆனாலும் அதனை சரியாக கையாண்டு பெட்டிங்கிலும் அசத்துகிறார். குறைந்தபட்சம் டி20 அணிக்காவது மற்றொரு வீரரை கேப்டனாக நியமிக்க கருத்துக்கள் வருகின்றன. ஆனால், அவரின் செயல்பாட்டை பார்க்கையில் அதுவும் தேவை இல்லை என்றே தோன்றுகிறது என்றும் கூறினார்.

Prabhu Soundar:

This website uses cookies.