இவர் தான் எனது இன்ஸ்பிரேஷன்! வெளிபடையாக கூறிய மும்பை சூர்யகுமார் யாதவ்! ஆனால் அது ரோஹித் சர்மா இல்லை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். சமீப காலங்களில் உள்ளூர் தொடர்களில் அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரிலும் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை அளித்து வருபவர் சூர்யகுமார் யாதவ்.
அவருக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தான் அறிமுகமான முதல் போட்டியில் தான் மேற்கொண்ட முதல் பந்தையே சிக்ஸராக தூக்கி அடித்தார்.அந்த போட்டியில் இவர் அரைசதம் அடித்தார் என்பது கவனத்திற்குரிய விஷயமாகும். வருகிற ஜூலை மாதம் சூர்யகுமார் யாதவ் இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டகிரம் வலைதளத்தில் ரசிகர்களுடன் கேள்வி மற்றும் பதில் உரையாடலை நிகழ்த்தினார். அதில் பல்வேறு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விராட் கோலி தான் எனது இன்ஸ்பிரேஷன்

அதில் ஒரு ரசிகர் உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார் என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் விராட் கோலி என்று கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டு விளையாட தொடங்கிய விராட்கோலி அன்று முதல் இன்று வரை மூன்று வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். விராட் கோலி தற்போது வரை இந்திய அணிக்காக 91 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7490 ரன்களை குவித்துள்ளார், அதில் 27 சதங்கள் அடங்கும். அதேசமயம் 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இதுவரை அவர் 12,169 ரன்களை குவித்துள்ளார். அதில் 43 சதங்கள் அடங்கும். 90 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை விராட் கோலி 3159 ரன்களை குவித்துள்ளார், இதில் 28 அரைசதங்கள் அடங்கும். அதே சமயம் ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் அவர் மட்டுமே. மூன்று வகை கிரிக்கெட்டிலும் தன்னுடைய சராசரியை 50க்கு மேல் வைத்திருக்கும் ஒரு அற்புதமான வீரர் விராட் கோலி.

விளையாடுவது மட்டுமல்லாமல் அணியை தலைமை தாங்கும் விராட் கோலி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 45 டி20 போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கி அதில் 27 வெற்றிகளை வாங்கி தந்து உள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கி அதில் 36 டெஸ்ட் போட்டியில் வெற்றியை வாங்கி தந்து உள்ளார். அதேசமயம் ஒருநாள் போட்டிகளில் 95 போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்கி அதில் 65 வெற்றிகளை வாங்கி தந்து உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை தொடர்ச்சியாக ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் அணியாக நிலை நிறுத்தியிருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ் மட்டுமல்ல இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பல இளம் வீரர்களுக்கும் தற்போது இந்திய அணியில் இணைந்து உள்ள பல வீரர்களுக்கும் நிச்சயமாக விராட் கோலி ஒரு இன்ஸ்பிரேஷனாக தான் இருப்பார் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.