இந்த ஒரு விசயத்தில் கோஹ்லிய அடிச்சுக்க ஆளே கிடையாது; ரவி சாஸ்திரி புகழாரம்
உடற்தகுதி விஷயத்தில் இந்தியக் கேப்டன் விராட் கோலியை மிஞ்ச யாருமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டின் “ஸ்கை கிரிக்கெட்” தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் “ஒரு அணிக்கு கேப்டன்தான் “பாஸ்”. அதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. பயிற்சியாளரின் வேலை என்பது வேறு. அணியின் வீரர்களுக்கு போதிய பயிற்சியை கொடுத்து, அவர்களை உத்வேகப்படுத்தி, பயமில்லா கிரிக்கெட்டை விளையாட வைப்பதே என்னுடைய பணி. அணிக்கு தலைமைத்தாங்கி முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். நாங்கள் கேப்டனின் சுமையை குறைக்க உதவுவோம், ஆனால் ஆடுகளத்தில் அவர்தான் தன் பணியை செய்ய வேண்டும்” என கூறினார்.
விராட் கோலி குறித்து பேசிய சாஸ்திரி “உடற் தகுதி தலைமைப் பண்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் விராட் கோலிக்கு ஈடு இணை எவருமில்லை. அவர் ஒருநாள் காலை எழுந்து என்னிடம் கூறினார், இநத உலகிலேயே நல்ல உடற்தகுதியுன் இருக்கும் கிரிக்கெட் வீரராக தான் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். அதனை அவர் இப்போது வரை கடைபிடித்து வருகிறார். அணியில் தொடா்ந்து ஓய்வின்றி ஆடி வரும் வீரா்களில் கோலியும் முக்கியமானவா். டெஸ்ட் கிரிக்கெட் தான் இந்திய அணி மிக முக்கியமானதாக பார்க்கிறது. அதில் நாம் நம்முடைய தரமான கிரிக்கெட்டை நிரூபிப்போம்” என்றார்.
ஊரடங்கு உத்தரவு குறித்து பேசிய ரவி சாஸ்திரி “மற்ற விளையாட்டுகளைப் போலவே கிரிக்கெட்டும் கொரோனா பாதிப்பால் நிலைகுலைந்துள்ளது.
பல்வேறு சா்வதேச, உள்ளூா் போட்டிகள் ரத்தாகி விட்டன. இந்த ஓய்வு என்பதை மோசமானது என கூற முடியாது. ஏனென்றால் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின் முடிவில் வீரா்களுக்கு மனத்தளா்ச்சி, உடல்தகுதி இன்மை, காயங்கள் ஏற்பட்டன. இப்போது ஊரடங்கு உத்தரவாலும், தனிமைப்படுத்துதலாலும் கிரிக்கெட் வீரா்கள் புத்துணா்வு பெறுவா். கடந்த 10 மாதங்களில் ஏராளமான ஆட்டங்களில் ஆடியது நமது இந்திய அணிக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.