அன்னைக்கு தோனி இல்லனா இப்ப கோலி இல்லை ! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் சஞ்சய் மஞ்ரேக்கர் !
ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டியில் 3 டி20 போட்டியிலும் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியின் டி20 தொடரை இந்திய அணியும் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க போகிறது.
இதற்காக இரு அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. பகலிரவு போட்டியாக நடக்கப்போகிறது முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடும் விராட் கோலி, அதற்கடுத்த மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார். ஏனெனில் அவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது. இதன் காரணமாக தனது மனைவியுடன் அந்த நேரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் காலத்தில் இந்தியாவிற்கு சென்று விடுவார்.
இந்நிலையில் சர்ச்சை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலி குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “விராட் கோலி எப்போதுமே ஜாம்பவான் வீரர்.2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சென்று விளையாடி ஒரு சதம் அடித்தார் விராட் கோலி. அந்த தொடரில் வேறு எந்த பேட்ஸ்மேன் இவரைப் போன்று சதம் அடிக்கவில்லை. அவருக்கு மிகவும் இளம் வயது சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் அவரை அணியில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.
அந்த நேரத்தில் கேப்டனாக இருந்த தோனிதான் விராட் கோலியை காப்பாற்றியிருக்கிறார். அணியிலிருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதற்கு தோனிதான் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அதன் பின்னர் அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. அதற்கு அடுத்து சதமடித்தார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் விராட் கோலி” என்று தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்