2016 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் இந்த அணிதான் மிகச் சிறந்த அணியாக இருந்திருக்கிறது! ஓபனாக பேசிய விராட் கோலி!

2016 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் இந்த அணிதான் மிகச் சிறந்த அணியாக இருந்திருக்கிறது! ஓபனாக பேசிய விராட் கோலி!

ஐபிஎல் தொடர் கடந்த 12 வருடமாக நடைபெற்று வருகிறது. இத்தனை வருடங்கள் நடைபெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் தான் பெரும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே ஏழு முறை கோப்பையை வென்று இருக்கிறது.மற்ற அணிகள் எல்லாம் இந்த இரண்டு அணிகளுடன் எவ்வாறு மோதுவது  என்றுதான் யோசித்துக் கொண்டு இருக்கின்றன.

அப்படிப்பட்ட அணிகளில் ஒன்றாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தாலும், இவர் தற்போது வரை சரியாக செயல்பட்டு ஒரு கோப்பையை பெற்று தர முடியவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து 7 வருடமாக இந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஒவ்வொரு வருடமும் அணியை மாற்றி கட்டமைத்து, வீரர்களை புதிது புதிதாக எடுத்து இருந்தாலும். தற்போது வரை  பழைய கதையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணி தான் மிகச் சிறந்த அணியாக இருந்திருக்கிறது. ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் விராட் கோலி. அவர் கூறுகையில்,

“நான்  ஒப்புக்கொள்வேன் எங்கள் அணி தான் மிகச் சிறந்த அணியாக இருந்திருக்கிறது. கிறிஸ் மோரிஸ் போன்ற ஆல்ரவுண்டர் வீரர்கள் இருந்திருக்கிறார்கள். நாங்கள் எடுக்கும் இளம் வீரர்களும் சிறந்த திறமை வாய்ந்த வீரர்களாக தான் இருந்திருக்கிறார்கள்.

தற்போது ஆரோன் பின்ச் ஜோஸ், ஃபிலிப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுத்திருக்கிறோம். சொல்லப்போனால் 2016ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணி தான் மிகச் சிறந்த அணியாக இருந்திருக்கிறது. ஆனால் கோப்பைகளை தான் வெல்ல முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

Mohamed:

This website uses cookies.