“விராட் கோலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ்” – முன்னாள் பேட்டிங் கோச் பேட்டி!

விராட் கோலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் இதுதான் என்று முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பேட்டியளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலி கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு மேல் சதம் அடிக்காமல் இருந்ததால் பலரும் அவர் மீது அதிருப்திக்கு உள்ளாகினர். குறிப்பாக இந்திய அணி நிர்வாகம் கூடுதல் அழுத்தத்தை விராட் கோலி மீது வைத்தது. 2019க்கு பிறகு கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பெரிதளவில் விராட் கோலி செயல்படவில்லை. அவ்வப்போது அரைசதம் அடித்தார். ஆனால் விராட் கோலி என்றாலே சதத்திற்கு பெயர் போனவர் என்பதால் அவர் மீது சதம் அடிக்கவில்லை என்ற விமர்சனம் பின் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் அடித்து அசத்தினார். 5 போட்டிகளில் 276 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்ததாக வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மூன்றாவது மற்றும் முக்கியமான டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

மீண்டும் பழைய பார்மிற்கு வந்திருக்கும் விராத் கோலி, டி20 உலக கோப்பையில் எவ்வாறு செயல்படுவார்? தற்போது அவரது மனநிலை மற்றும் பேட்டிங் செய்யும் விதம் எப்படி இருக்கிறது? என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“விராட் கோலி இத்தனை ஆண்டு காலம் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு புதிதாக நான் ஒன்றும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தொடர்ந்து இடைவிடாமல் தனது பங்களிப்பை கொடுத்து வந்ததால், நடுவில் சில ஆண்டுகள் தனது இயல்பான பார்மில் இல்லாததற்கு வழக்கமாக வீரர்கள் சந்திக்கும் விமர்சனத்தை விட அதிகமாகவே சந்தித்து விட்டார். மீண்டும் தனது பார்மிற்கு திரும்பி வருகிறார். ரன்களை அடிப்பதற்கு மீண்டும் பசியுடன் காணப்படுகிறார்.

விராட் கோலி நல்ல பார்மில் இருப்பதை எளிதில் உணர முடியும். அவர் தனது விளையாட்டை என்ஜாய் செய்து விளையாடுவார்.  இப்படி ஒரு மனநிலை டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னால் வந்திருப்பது மிகப்பெரிய பலம்.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.