விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங் !!

விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்னும், இங்கிலாந்து 161 ரன்னும் எடுத்தன.

168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 521 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 317 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதன் முலம் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்னும், 2-வது இன்னிங்சில் 103 ரன்னும் எடுத்து இந்திய கேப்டன் விராட்கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து அணியுடனான இந்த வெற்றியை தொடர்ந்து விராட் கோஹ்லிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கோஹ்லியையும், இந்திய அணியையும் புகழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிர்க்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும், விராட் கோஹ்லிக்கு  தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது, விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. கோஹ்லியை போன்ற முதல் இன்னிங்ஸில் ரஹானேவும், இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவும் சிறப்பாக விளையாடினர். புஜாரா மற்றும் ரஹானே போன்ற வீரர்கள் தங்களது பார்மிற்கு மீண்டும் திரும்பியுள்ள இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை விராட் கோஹ்லி மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

கோஹ்லி குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது;

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘கிரிக்கெட்டில் கோலியின் ஆர்வம் என்பது எப்படிப்பட்டது என அனைவருக்கும் தெரியும். இவ்வளவு தொழில் தர்மத்துடன் வேறு ஒரு கிரிக்கெட் வீரரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. வெற்றிக்காக தயாராவதில் கோலியை சச்சின் ஒருவருடன் மட்டுமே ஒப்பிட முடியும். அதற்காக திட்டமிடுவதிலும் கோலி கில்லாடி.’ என்றார்.

Mohamed:

This website uses cookies.