ஆட்டநாயகன் விருதுடன் தனக்கு கிடைத்த மது பாட்டிலை ரவி சாஸ்திரிக்கு பரிசளித்த விராட் கோஹ்லி !!

ஆட்டநாயகன் விருதுடன் தனக்கு கிடைத்த மது பாட்டிலை ரவி சாஸ்திரிக்கு பரிசளித்த விராட் கோஹ்லி

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோஹ்லி தனக்கு கிடைத்த மது பாட்டிலை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பரிசளித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகம்மில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்னும், இங்கிலாந்து 161 ரன்னும் எடுத்தன.

168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 521 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 317 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதன் முலம் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்னும், 2-வது இன்னிங்சில் 103 ரன்னும் எடுத்து இந்திய கேப்டன் விராட்கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோஹ்லிக்கு, விலை உயர்ந்த மது பாட்டில் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது, அதனை விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது;

கோலிக்கு ஆட்டத்தின் மீது உள்ள பற்றும் காதலும் ரொம்ப அதிகம். அவரை போன்ற ஒரு வீரரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் இந்த போட்டியில் ஆடிய இரண்டு இன்னிங்ஸ்களும் அவரால் மறக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்றார்.

மேலும் பேசிய அவர், எங்களால் உலகின் எந்த அணியையும் அவர்களது இடத்தில் வைத்தே வீழ்த்த முடியும். அதேநேரத்தில் எந்த அணியும் இந்தியாவிற்கு வந்து எங்கள் அணியை வீழ்த்த முடியாது. நாங்கள் இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் சென்று வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம். எங்கள் அணி உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி(எதிரணியை அந்த நாட்டில் வைத்து வீழ்த்துவதை குறிப்பிடுகிறார்) என தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.