உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கோஹ்லி, தோனி!!

India's captain Virat Kohli, left, shares a light moment with teammate Mahendra Singh Dhoni after scoring 10,000 runs in one-day internationals during the second one-day international cricket match between India and West Indies in Visakhapatnam, India, Wednesday, Oct. 24, 2018. (AP Photo/Aijaz Rahi)

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி உலகின் ஏழாவது மிக பிரபலமான விளையாட்டு வீரராக பார்க்கப்படுகிறார். அண்மையில், நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் உலகின் மிக பிரபலமான 100 வீரர்களில் MS டோனி, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உள்ளனர்.

கருத்து கணிப்பு மூன்று அம்சங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. முதலாவதாக, சமூக வலைத்தளங்களில்  தொடர்பவர்கள் எண்ணிக்கை, இரண்டாவது, ஒரு கூகுளில் அதிக தேடல்கள் மற்றும் இறுதியாக, அவர்கள் பெற்ற விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை இருந்தது. உண்மையில், விராத் கோஹ்லி தான் முதல் 10 பட்டியலில் உள்ள ஒரே இந்திய வீரர் மற்றும் கிரிக்கெட் வீரர் ஆவார்.

இதற்கிடையில், கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் மிகவும் பிரபலமான தடகள வீரர் ஆவார். கூடைப்பந்து நட்சத்திரம் லெப்ரொன் ஜேம்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், நெய்மர், லியோனல் மெஸ்ஸி, ரோஜர் ஃபெடரர் மற்றும் ரபேல் நடால் போன்ற பெரிய வீரர்கள் முதல் 10 பட்டியலில் உள்ளனர்.

மறுபுறத்தில், இந்திய கேப்டன் விராத் கோலி சமீபத்தில் மிகச்சிறந்த வடிவத்தில் உள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளில் மூன்று விருதுகளை கோஹ்லி  தன் வசம் வைத்திருந்தார். பல சாதனைகளை திருத்தி எழுதுவதையே வழக்கமாக கொண்டிருப்பவர் விராத் கோஹ்லி.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 41 சதங்களை நடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்தார். எனவே, இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக கோலி ஒரு சீரான வீரராக உள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக தோனி உள்ளார். தோனியின் அதிரடி தற்போது குறைந்து போயின, ஆனால் அனுபவமிக்க வீரர் மீண்டும் மீண்டும் திரும்பினார். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார். இதற்கிடையில், யுவராஜ் சிங் மூன்றாவது பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.

இந்நிலையில், இந்தியா 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது. இது உலகக் கோப்பைக்கு முன் அவர்களின் கடைசி ஒருநாள் தொடராகும், இப்போது வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட தயாராகி வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.