இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து 3வது முறையாக “உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்” என விஸ்டேன் கிரிக்கெட் இதழால் கவுரவிக்கப்பட்டுள்ளார். இது அந்த பத்திரிக்கையின் இம்மாத இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வருட துவக்கத்தில் இங்கிலாந்து சென்றிருந்த இந்திய அணியில், சென்ற முறை (2014ஆம் ஆண்டு) விராத் கோஹ்லி இங்கிலாந்து தொடரில் 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால், இம்முறை என்ன செய்யப்போகிறார் என எதிர்பார்க்கபட்டது.
அதற்கு ஏற்றாற்போல, 5 போட்டிகளில் 593 ரன்கள் குவித்து அசத்தினார். இதனை விஸ்டேன் இதழ் மேற்கோளிட்டு காட்டியது. மேலும், அந்த இதழில், கோஹ்லி இந்த ஆண்டின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் என ஐசிசி யால் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு கோஹ்லி, அனைத்து வித கிரிக்கெட்டிலும், 2735 ரன்கள் அடித்திருந்தார். சராசரியாக 68.37 வைத்திருந்தார். இதில் 11 சதங்கள் அடங்கும்.
பெண்கள் அணியில் ஸ்மிருதி மடான்னா சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக ஐசிசி யால் தேர்வு செய்யப்பட்டார்.
ஒருநாள் போட்டியில் கோஹ்லி 42 அரை சதங்கள் அடித்து, 40 சதங்கள் அடித்துள்ள 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பாக இந்த சாதனையை சச்சின் மட்டுமே செய்திருந்தார்.
அண்மையில், நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தொடர்ச்இயங்க இரு சதங்களை அடித்து பெருமைபெற செய்தார்.
சென்ற ஆண்டு, உலக அளவில் 10000 ஓட்டங்கள் கடந்த 13 ஆவது வீரர் ஆவார். இந்திய அளவில் 10,000 ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது வீரர் ஆவார். இருப்பினும் இவர் தான் மிகக்குறைந்த போட்டிகளில் இந்த இலக்கைக்கடந்த முதல் வீரர் ஆவார்.
2018 ஆம் ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்தினா விருதையும் தட்டி சென்றார். கோஹ்லி.
பிசிசிஐ கிரிக்கெட் வாரியதால் தொடர்ந்து 4 முறை சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் விருதையும் இவர் வாசா படுத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.