இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஐசிசியிடம் கேட்டுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.
மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தென் ஆப்பிரிக்க அணி மிக எளிதாக போட்டியை வெற்றி பெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி மிகவும் எளிதாக நடைபெற்று முடிந்தாலும் இதில் இந்திய அணி வீரர்கள் செய்த சர்ச்சை கிரிக்கெட் வல்லுனர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் போட்டியில் 22 ரன்கள் இருந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், அஸ்வின் வீசிய புல் லேந்த் பந்தால் LBW அப்பீல் செய்யப்பட்டு களநடுவர் அவுட் கொடுக்கப்பட்டார்.ஆனால் அதை டீன் எல்கர் ரிவீவ் செய்தார்,ஆனால் பால் டிராக்கிங் பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்று விட்டது என்று காட்டியது இதனால் மூன்றாம் நடுவர் நாட் அவுட் கொடுத்துவிட்டார், இது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதால் இந்திய அணி வீரர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர், குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொஞ்சமாவது நியாயமாக இருங்கள் என்று மைக்கிடம் வந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், அதேபோன்று இந்திய அணியின் அஸ்வின் ஜெயிப்பதற்கு இதைவிட சிறந்த வழிகள் உள்ளது என்று தனது கோபத்தை காட்டினார் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது நாள் போட்டியில் நடைபெற்ற சர்ச்சை குறித்து இந்திய அணியின் மைக்கள் வான் நிகழ்ச்சி ஒன்றில் ஐசிசி விராட் கோலியை தற்காலிக இடைநீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதில், என்னதான் நீங்கள் மூன்றாம் நடுவரின் முடிவில் அதிருப்தியாக இருந்தாலும் அதனை களத்தில் இப்படி அநாகரீகமாக வெளிப்படுத்தக் கூடாது, உடனடியாக ஐசிசி இதில் தலையிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.