ஒரே சதத்தில் 3 பெரிய சாதனைகளை காலி செய்த கிங் கோலி!!

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் T20 தொடரின் 3 போட்டிகளையும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் புரிய வாய்ப்புள்ளது.

West Indies got a breakthrough in the first over of the match removing Shikhar Dhawan, whose poor run with the bat continues. Since then, Virat Kohli led the revival of India with another swashbuckling knock.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி இதுவரை 1912 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார் கோலி. முதலிடத்தில் 1930 ரன்களுடன் பாகிஸ்தான் அணியின் ஜாவித் மியாண்டாட் உள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி 19 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இன்று விராட் கோலி 34 இன்னிங்சில் 26 வருடத்திற்குப் பிறகு மியான்தத் சாதனையை முறியடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மார்க் வாக் 1708 ரன்களும், கல்லீஸ் 1666 ரன்களும், பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா 1624 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 1573 ரன்களும் அடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலி 7 சதங்களும், 10 அரைசதங்களும் விளாசியுள்ளார்.

மேலும் ஒட்டுமொத்தமாக சகுரவ் கங்குலியின் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களையும் முந்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இந்தியா விளையாடிய போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் டெஸ்மாண்ட் ஹேன்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 2 சதங்களை அடித்துள்ளனர். இன்னும் ஒரு சதம் அடித்தால் அந்தச்சாதனையை கோலி முறியடிப்பார். இந்திய அணியின் ரன் குவிக்கும் எந்திரமான விராட் கோலி இச்சாதனைகளை எளிதில் முறியடியத்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.