26/11 என அழைக்கப்படும் மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தி அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
நவம்பர் 26ஆம் தேதி 2008ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று மும்பையில் நிகழ்ந்தது.
இதற்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். விராட் கோலி தனது அதிகாரபூர்வ பக்கத்தில்,
“26/11 தாக்குதலின் போது உயிர்களை இழந்த துணிச்சலானவர்களையும் அப்பாவி பொதுமக்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மைவிட்டு அவர்கள் பிரிந்தாலும், மறக்கபோவதில்லை” என பதிவிட்டார்.
இதுகுறித்து சித்தேஸ்வர் புஜாரா வெளியிட்ட பதிவில்,
“26/11 தாக்குதலில் எங்களை பாதுகாக்க தங்கள் உயிரை தியாகம் செய்த தைரியமான ஹீரோக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு அமைதியான பிரார்த்தனையை முன்வைக்கிறேன்” என பதிவிட்டார்.
மும்பை தாக்குதல் குறித்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்ட பதிவில்,
“26/11 தாக்குதல் அப்பாவி உயிர்களை எடுத்தது. அது தொடர்ந்து வீரம் மற்றும் தியாகிகளைப் பெற்றெடுத்தது. அவர்கள் தொடர்ந்து தங்கள் வீரம் மூலம் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள். எங்களை பாதுகாக்க தங்கள் உயிரை விட்டுக்கொடுத்தவர்களுக்கு எனது வணக்கம். உங்களை எப்போதும் அன்பாக நினைவில் கொள்வோம்” என பதிவிட்டார்.
மும்பை தாக்குதல் குறித்து இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே வெளியிட்ட பதிவில்,
“26/11 தாக்குதலின் போது நகரம் எவ்வாறு நின்றுவிட்டது என்பதை இன்னும் நினைவில் கொள்ளுங்கள். பாதுகாப்புப் படையினர் காட்டிய முன்மாதிரியான தைரியம் பெரும் மரியாதைக்குரியது. எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் அவர்களுடன் இருக்கட்டும்” என்றார்.
மேலும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் மும்பை தாக்குதல் குறித்து தங்களது பதிவுகளை ட்விட்டரில் தெரிவித்தனர்.