ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஏன் நீங்கள் சரியாக ஆடுவதில்லை? என கோலியிடம் நிருபர்கள் கொள்வியெழுப்பினர். அதற்க்கு பதில் அளித்துள்ளார் விராத் கோலி.
இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் மே 30-ம் தேதி துவங்கி ஜூன் 14ம் தேதி வரை நடந்து கொண்டிருக்கிறது. நாளை (ஜூன் 14ம் தேதி) நடக்க இருக்கும் இறுதி போட்டியில், அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது
இதில் உலக கோப்பை இறுதி வரை சென்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்களில் தோல்வியை தழுவியது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோலி மற்றும் கேஎல் ராகுல் மூவரும் தலா வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஐசிசி தொடர்களின் நாக்-அவுட் சுற்றில் மோசமான ரெக்கார்ட் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி மற்றும் தற்போது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆகிய தொடர்களிலும் நாக் அவுட் சுற்றில் படுமோசமாக செயல்பட்டுள்ளார்.
3 உலகக்கோப்பை அரையிறுதியில் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 6 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் 73 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இவரது சராசரி 13க்கும் குறைவாகும்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், நம்பர் 1 இடத்திலும் இருந்து வரும் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை தகர்த்தெறிய வந்தவர் என கருதப்பட்டு வரும் நிலையில், இப்படி மோசமான ஆட்டத்தை தேவைப்பட்ட நேரங்களில் வெளிப்படுத்தி வருவது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் கோலியிடம், “நீங்கள் நாக் அவுட் சுற்றில் மோசமாக செயல்படுகிறீர்களே?” என கேள்வியை எழுப்பினார். அதற்க்கு பதில் அளித்த கோலி கூறுகையில், “அணிக்கு தேவைப்படும் நேரங்களில் சரியாக செயல்படாதது மிகவும் வருத்தப்பட கூடிய ஒன்றாக இருக்கிறது. நம்பர் 1 வீரராக இருந்தாலும், அணிக்கு முக்கிய தொடர்களில் வெற்றி பெற உதவவில்லை என்றால், அது வீணாக தான். நடந்து முடிந்ததை நினைத்து பலனில்லை. தவறுகளை திருத்திக்கொள்ள இனி வரும் போட்டிகளை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செயல்படுவேன். தவறுகளை சுட்டி கட்டுவது சரி தான். விமர்சனத்தை விமர்சனமாக கூறுங்கள். ஏளனமாக வேண்டாம்” என்றார்.