ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் அறிவிப்பு !விராட் கோலி, ரோகித் சர்மா மாஸ் !

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் அறிவிப்பு !விராட் கோலி, ரோகித் சர்மா மாஸ் !

தற்போது ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று முடிந்ததும் அதனை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது.

இதற்குப் பின்னர்தான் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி தனது நாட்டில் ஜிம்பாவே அணியை வரவழைத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது

இந்த தொடர் நடைபெற்று முடிந்த உடன் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தொடரில் அந்த அணியின் இமது வாசிம் நாற்பத்தி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 221 ரன்கள் எடுத்திருந்தார் இதன்மூலம் பேட்ஸ்மேன்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அதே அணியின் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஆப்ரிடி கடைசி போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக முதன்முறையாக பந்துவீச்சாளர்கள் கான தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார். பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலியும் இரண்டாவது இடத்தில் துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இடம் பிடித்திருக்கின்றனர்

ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அணிகள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் முதலிடத்திலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

Prabhu Soundar:

This website uses cookies.