சச்சின் இல்லை… இளம் வீரர்களின் ரோல் மாடல் இவர் தான்; சஞ்சு சாம்சன் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி தான் இளம் வீரர்களின் ரோல் மாடல் என இளம் வீரரான சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பருக்கான ரேஸில் ரிஷப் பண்ட் முன்னிலையில் இருந்தாலும், சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கலாம் என்பதே பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கருத்தாக இருந்து வருகிறது. ரிஷப் பண்டிற்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தாலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் ரிஷப் பண்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், விராட் கோஹ்லி தான் தனக்கும் தன்னை போன்ற இளம் வீரர்களுக்கும் ரோல் மாடல் என சஞ்சு சாம்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சு சாம்சன் பேசியதாவது;
டிரெசிங் ரூமில் இருக்கும் போது கூட விராட் கோஹ்லி என்னை போன்ற இளம் வீரர்களுக்கு நிறைய ஆலோசனைகளை கொடுத்து கொண்டே இருப்பார். பேட்டிங், பீல்டிங் டிப்ஸ் மட்டுமல்லாமல் உடலை பிட்டாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்தும் விராட் கோஹ்லி அதிகமான அறிவுரைகள் வழங்குவார்.
களத்தில் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படும் விராட் கோஹ்லி மற்ற நேரங்களில் அவரை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் பழக்கம் உடையவர். என்னை பொறுத்தவரையில் விராட் கோஹ்லி என்னை போன்ற பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடல் என்றும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.