2020லயே ஷிகர் தவானை தூக்க பிளான் பண்ணிய பிசிசிஐ.. தேர்வுக்குழுவிடம் போராடி இருக்க வைத்த விராட் கோலி – கசிந்த உண்மைகள்!

ஷிகர் தவானின் சர்வதேச வாழ்க்கை எப்பவோ முடித்திருக்க வேண்டியது, விராட் கோலியின் தயவால் மட்டுமே இருந்திருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளது.

இலங்கை அணியுடன் நடக்கவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் துணைகேப்டன் பொறுப்பு முதன்முறையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கேஎல் ராகுல் அதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.

ஒருநாள் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் மூத்த வீரர் ஷிகர் தவான் நீக்கப்பட்டு இருக்கிறார். துவக்க வீரர் இடத்தில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகிய இருவரும் துவக்க இடத்திற்கு கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

2022-ல் 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 638 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி 70.89 ஆகும். இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கியுள்ளன.

அதேபோல் இஷான் கிஷன் வங்கதேச அணியுடன் கிடைத்த ஒரு வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இளம் வீரராக இருப்பதால் இந்திய அணியின் எதிர்காலமாகவும் பார்க்கப்படுகிறது.

தவானுக்கு தற்போது 37 வயதாகிறது. 2022ல் அவர் ஆடிய விதம் திருப்தி அளிக்கவில்லை. 22 போட்டிகளில் 688 ரன்கள் அடித்திருக்கிறார். 6 அரைசதங்கள் அடித்திருந்தாலும் இவரது சராசரி 34.4 மட்டுமே. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. இதுவும் பின்னடைவாகவே இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரிலேயே ஷிகர் தவான் நீக்கப்படுவதாக இருந்தது. ஆனால் விராத் கோலி தேர்வுக்குழுவினருடன் போராடி அவரை உள்ளே எடுத்து வந்ததால் மட்டுமே அணியில் இருந்திருக்கிறார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.

அதாவது 2019 மற்றும் 2020ல் ஷிகர் தவான் சரியாக செயல்படாததால், 2021ல் நடந்த இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் போது பிசிசிஐ தேர்வுக்குழுவினர் ஷிகர் தவானை நீக்கிவிட்டனர். விராட் கோலியை அழைத்து அணியை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்தான் ஷிகர் தவானுக்காக பேசி அணியில் எடுக்க வைத்திருக்கிறார்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தவான், அந்தத் தொடரின் மூன்று போட்டிகளில் 169 ரன்கள் அடித்து 56.33 ரன்கள் சராசரியாக கொண்டிருந்தார். மேலும் 95 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதன் காரணமாக அடுத்த அடுத்த தொடர்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் 2022 இறுதியில் நடந்த வங்கதேசம் அணியுடனான தொடரின் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 41 ரன்கள் மட்டுமே அடித்தார். துவக்க இடத்திற்கு இளம் வீரர்கள் போட்டிபோடுவதால், தயக்கமின்றி தவான் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நான்கு வருடங்களாக ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வருகிறார். இனி அவருக்கு அதிலும் வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என தெரியவந்துள்ளது.

Mohamed:

This website uses cookies.