ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பல முறை ஏமாற்றம் நிறைந்த முடிவை அளித்தாலும், அவருடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் அணிக்கு விராத் கோஹ்லி நன்றியுடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கவுதம் கம்பீர் நம்புகிறார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோருடன் கோஹ்லியை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் கம்பிர்.
“கோஹ்லிக்கு செல்ல இன்னும் ஒரு நீண்ட தூரம் இருக்கிறது. கோஹ்லி நல்ல அதிரடி வீரராக இருக்கலாம் ஆனால் அதிரடி கேப்டனாகவும் யுக்திகளை கொண்ட கேப்டனாகவும் பார்க்க இயலாது. காரணம், அவர் இதுவரை ஐபிஎல் தொடரை வென்றதில்லை. தன் வசம் பல சாதனைகளை வைத்துக்கொண்டு ஐபில் தொடரை வெல்லாத கேப்டன் இவராக தான் இருக்க முடியும். மூன்று முறை கோப்பை வென்றவர்கள் – தோனி மற்றும் ரோஹித் ஷர்மா. எனவே கோஹ்லி செல்ல நீண்ட தூரம் உள்ளது என்று நினைக்கிறேன். இந்த நிலையில், ரோஹித் அல்லது தோனி போன்ற ஒருவரோடு கோஹ்லியை ஒப்பிட முடியாது, ஏனென்றால் பெங்களூரு அணிக்கு ஏழு எட்டு ஆண்டுகளாக தலைமை வகுத்தும் ஒரு கோப்பையை கூட அவரால் வெல்ல இயலவில்லை என்பது தான்” என்று ஐ.பி.எல். 2019 க்கு முன்னால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகுப்பாய்வு நிகழ்ச்சியில் காம்பீர் கூறினார்.
96 போட்டிகளில் வெறும் 44 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
தவறான முடிவுகளாலேயே பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்லாமல் இருக்க காரணம் என கோஹ்லி ஒருமுறை கூறியிருக்கிறார்.
“நீங்கள் தவறான முடிவு எடுத்தால், நீங்கள் இழப்பீர்கள். எங்கள் முடிவு எடுக்கும் திறன் ஐபிஎல் போன்ற பெரிய விளையாட்டுகளில் சிறப்பாக இல்லை. சிறப்பான முடிவை எடுக்கும் போது, ஐபிஎல் போட்டிகளில் அந்த அணிகளை வென்றுள்ளோம், “என்றார் கோலி.