தோல்வியிலும் கோஹ்லிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் என்ன தெரியுமா..?
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. டி20 தொடரை வென்று இருந்த இந்திய அணி நிச்சயம் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் என்று நம்பியிருந்த நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
‘பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் முக்கிய திருப்பு முனையாக இருந்து ரன் குவிப்பார் என்று எதிர்பார்த்தேன். அதேபோல், புவனேஸ்வர் குமார் மீண்டு வந்து விக்கெட்டுகளை சேர்ப்பார் என்று நினைத்தேன் இரண்டும் நடைபெறவில்லை’ என்று போட்டிக்கு பின்னர் கோலி வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்தத் தோல்வியிலும் கோலிக்கு ஒரே ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது. அது கேப்டனாக கேப்டனாக ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. கோலிக்கு முன்பு விரைவாக 3000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இருந்த தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் மற்றும் தோனியின் சாதனை முறியடித்தார் அவர்.
இங்கிலாந்துடனான போட்டியில் கேப்டன் விராட் கோலி 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். நேற்றைய போட்டி கோலியின் கேப்டனாக 52-வது போட்டியாகும், இதில் 49 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார்.விராட் கோலி 14 ரன் அடித்திருக்கும்போது கேப்டன் பதவியில் இருந்து விரைவாக 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு ஏபி டி வில்லியர்ஸ் 60 இன்னிங்சிலும், தோனி 70 இன்னிங்சிலும், கங்குலி 74 இன்னிங்சிலும், கிரேம் ஸ்மித் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் 83 இன்னி்ங்சிலும், ஜெயசூர்யா மற்றும் ரிக்கி பாண்டிங் 84 இன்னிங்சிலும் 3000 ரன்களை கடந்துள்ளனர்.