புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் அரங்கில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரரான கோலி, சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார். ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். இது போட்டிக்கு போட்டி நடந்துவருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் சாதனையை செய்ய தவறவில்லை கோலி. இந்த போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி டெஸ்ட் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்த போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸிலும் கோலி சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் 46 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 58 ரன்களும் எடுத்தார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 4000 எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
கோலி கேப்டனாக, 65 இன்னிங்ஸ்களில் 4000 டெஸ்ட் ரன்களை கடந்துள்ளார். கோலிக்கு அடுத்து, 71 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்த பிரயன் லாரா இரண்டாவது இடத்திலும் 75 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதி வேகமாக 4000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியல்;
விராட் கோஹ்லி;
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி வெறும் 65 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.