இந்த பிரபஞ்சத்தின் தலைசிறந்த வீரர் விராட் கோஹ்லி தான்; சேன் வார்ன் புகழாரம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான நாளை(டிசம்பர் 26) மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ள நிலையில், பாக்ஸிங் டே போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
அதனால் இதற்கு முந்தைய பாக்ஸிங் டே போட்டிகளை விட இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிறந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பிலும் கட்டாயத்திலும் களமிறங்குவதால் போட்டி கண்டிப்பாக மிகவும் விறுவிறுப்பாக அமையும்.
இதற்கிடையே இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, ஒவ்வொரு வருடமும் சிறப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த பாக்ஸிங் டே போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் தொடர் 1-1 சமநிலையில் உள்ளதாலும் நீண்ட காலத்திற்கு பிறகான சிறந்த டெஸ்ட் தொடர் என்பதாலும் மட்டுமல்ல. இந்த தொடரில் பூமியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆடுவதாலும்தான் என்று வார்னே கோலியை புகழ்ந்துள்ளார்.
டிராவிட் பாராட்டு;
5 நாள் போட்டியில் உங்களது உடல் தகுதி, மனஉறுதி, கிரிக்கெட் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ள முடியும். எனவேதான் அது சவாலானது. உங்களுக்கு சவால் வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.
அனைத்து வடிவிலான கிரிக் கெட்டிலும் சிறப்பாக எப்படி விளை யாட வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். பெர்த்தில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியின்போது முதல் இன்னிங் ஸில் அவர் சிறப்பாக விளையாடி னார். அவருக்கு எதிராக பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் கவனத் துடன் பந்து வீச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.