டான் பிராட்மேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்த கோலி! தோற்றாலும் வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் கடுமையாகச் சொதப்பியிருக்கலாம், சராசரி 9.50 ஆக இருக்கலாம், ஆனால் கேப்டனாக விராட் கோலி 5,000 டெஸ்ட் ரன்களைக் கடந்தவர்.

மொத்தம் 55 டெஸ்ட்களில் விராட் கோலி 5,146 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் ஒட்டுமொத்தமாக 6வது இடத்தில் இருக்கிறார்.

கேப்டனாக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 109 டெஸ்ட்களில் 8,659 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

ரிக்கி பாண்டிங் 77 டெஸ்ட்கள் கேப்டனாக ஆடியதில் 6542 ரன்களையும், ஆலன் பார்டர் 93 டெஸ்ட்களில் கேப்டனாக 6623 ரன்களையும் எடுத்துள்ளனர். மே.இ.தீவுகளின் கிளைவ் லாய்ட் 74 டெஸ்ட்களில் கேப்டனாக 5233 ரன்களையும் ஸ்டீபன் பிளெமிங் 80 டெஸ்ட்களில் கேப்டனாக 5156 ரன்களையும் எடுத்துள்ளனர்.

Photo by Deepak Malik / Sportzpics for BCCI

இதில் சராசரி அளவின்படி பார்த்தால் கேப்டனாக ஆஸ்திரேலிய லெஜண்ட் டான் பிராட்மேன் 101.51 என்ற சராசரியில் அசைக்க முடியா இடத்தில் இருக்க, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக 70.36 ரன்கள் சராசரி வைத்திருக்க 3வது இடத்தில் விராட் கோலி கேப்டனாக 61.21 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அதாவது கேப்டனாக குறைந்தது 3,000 டெஸ்ட் ரன்களை எடுத்தவர்கள் என்ற அடிப்படையில்.

 

இந்நிலையில், மார்ச் 12 துவங்கி 18 வரை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட ஒருநாள் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்குவார் என சுனில் ஜோஷி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஒருநாள் படைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், துணை கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டுக்கு இன்னும் தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் நடந்த சர்வதேச டி20 தொடரின் போது காயத்தால் வெளியேறிய ரோகித் சர்மா, அடுத்தடுத்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான தொடரிலும் இருந்து விலகியுள்ளார். எனினும், மார்ச் 29 முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020 -ன்) போது நட்சத்திர தொடக்க வீரர் மீண்டும் வருவார் என்று நம்புகிறார்.

Sathish Kumar:

This website uses cookies.