கர்பமாக உள்ள அனுஷ்கா சர்மா; மகிழ்ச்சியில் விராட் கோஹ்லி
தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்பமாக உள்ளதை இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, பிரபல ஹாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று பேர்! என்று விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
தனது மனைவி கர்பமாக உள்ளதை விராட் கோஹ்லி அடுத்த நொடியில் இருந்து விராட் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பி.சி.சி.ஐ., ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வாழ்த்து விராட் கோஹ்லிக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளன. அதே போல் கிரிஸ் கெய்ல், ஹர்பஜன் சிங், டூபிளசிஸ் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பலரும் விராட் கோஹ்லிக்கு தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் விராட் கோஹ்லி வெளியிட்ட புகைப்படத்தை வைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ட்விட்டர் போன்ற தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.