சச்சின், தோனிக்கு கூட கிடைக்காத கவுரவும்!! ஆடும் போதே கோலிக்கு தட்டிய அதிர்ஸ்டம்!

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட்டில் சாதனை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களின் சொந்த ஊர் மைதானங்களின் ஒரு பகுதிக்கு வீரர்களின் பெயரை சூட்டி கவுரவிப்பது வழக்கம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரது பெயர்கள் அப்படி சூட்டப் பட்டுள்ளன. அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகே இப்படி பெயர் சூட்டப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரரின் பெயரை, மைதானத்தின் ஒரு பகுதிக்கு வைப்பது அரிது. அந்த பெரு மை இளம் வீரர் விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவர் பெயரைச் சூட்ட, அம்மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் ஷர்மா கூறும்போது, ‘’சர்வதேச கிரிக்கெட்டில் விராத் கோலியின் வியப் புக்குரிய பங்களிப்பு பெருமை அளிக்கிறது. அவரது சாதனைகளுக்காக அவரை கவுரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரி வித்துள்ளார்.

டெல்லியின் முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பெடி, அமர்நாத் ஆகியோரின் பெயர்களில் அங்கு ஏற்கனவே ஸ்டாண்டுகள் இருக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்து 11 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை நினைவுகூரும் வகையில் கோலி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தான் 18 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறும் புகைப்படத்தைத்தான் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த 11 ஆண்டுகளில் விராட் கோலி ஏராளமான கடினமான பாதைகளைக் கடந்து தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்களைக் குவித்த ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் 43 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 68 சதங்களை கோலி அடித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.