திரைப்படத்தில்நடிக்கிறார் விராட்? இன்ஸ்டாகிராமில் கோலி அறிவித்த ட்ரெய்லர் தேதி!!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு அறிமுகம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. சர்வதேச அளவில் நம்பர்-1 பேட்ஸ்மேனான இவர், சமீபத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

ஐக்கிய அரபு எமிரகத்தில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மற்றொரு பயணத்தை இந்த கேப்பில் துவங்கியுள்ளார் கோலி.

இந்நிலையில் இன்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு அறிமுகம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சூப்பர் ஹீரோ போல போஸ் கொடுக்கும் கோலி, ‘டிரைலர் தி மீவி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் உள்பட அர்ஜுன, துரோணாச்சார்யா, தயான்சந்த், விருதுக்குரியவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி வியாழக்கிழமை மத்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிவிப்பு:
வரும் 25-ஆம் தேதி நடைபெறும் விழாவில் கிரிக்கெட் வீரர் கோலி, மல்யுத்த வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கெளரவமிக்க ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படும்.

தயான்சந்த் விருதுகள்: சத்தியதேவ் பிரசாத் (வில்வித்தை), பாரத் குமார் சேத்ரி (ஹாக்கி), பாபி அலோஸியஸ் (தடகளம்), செளகலே தத்து (மல்யுத்தம்).குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 25-ஆம் தேதி விருதுகளை வழங்குகிறார்.
இதற்கிடையே ஒழுங்கீனம் காரணமாக துரோணச்சார்யா விருதுகள் பட்டியலில் இருந்து வில்வித்தை பயிற்சியாளர் ஜிவன்ஜோத் சிங் தேஜா பெயர் நீக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இது வில்வித்தை வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர், இந்திய வில்வித்தை அணியை சிகரத்துக்கு கொண்டு சென்றவர். கடந்த 2013-இல் இருந்து வீரர்களுடன் உள்ளார். அவரது சேவை, பயிற்சிக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என வில்வித்தை வீரர்கள் அபிஷேக் வர்மா, ரஜத் செளஹான் வலியுறுத்தியுள்ளனர்.
அதே போல் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா பெயர் துரோணாச்சார்யா பட்டியலில் இருந்து விடுபட்டதற்கு நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா வேதனை தெரிவித்தார்.
வழக்கு: பஜ்ரங் புனியா எச்சரிக்கை: கேல்ரத்னா விருதுக்குரியவர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என எச்சரித்துள்ளார். காமன்வெல்த், ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற புனியாவை மல்யுத்த சம்மேளனம் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது.
ஆனால் கோலி, சானுவை மத்திய அரசு தேர்வு செய்தது. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சி, வேதனையை தருகிறது. எனது பெயரை புறக்கணித்ததின் காரணத்தை தெரிவிக்கவேண்டும். விருதுக்கு தகுதியானவன் நான். கடைசி வாய்ப்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடருவேன் என்றார்.

Vignesh G:

This website uses cookies.