நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது மணிரத்னத்தின் உதவியாளராக இருக்கும் தனசேகரன் இயக்கம் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, ‘கும்கி’ திரைப்படத்தில் அறிமுகமாகி ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு 2007ஆம் ஆண்டில், பிரபல தொழிலதிபர் எம்.எஸ். மதிவாணனின் மகள் லட்சுமி உஜ்ஜைனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இத்தம்பதிக்கு விராட் என்ற மகன் உள்ளார். அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடீயோவிற்கு விக்ரம் பிரபுவும் நன்றி தெரிவித்துள்ளார்
தனது பெயரைக் கொண்ட சிறுவனின் பிறந்தநாள் தொடர்பாக சமூக வலைத்தளம் மூலம் அறிந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறுவன் விராட்டுக்கு வீடியோ மூலம் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கோலி அனுப்பிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம் பிரபு, உங்களின் தீவிர ரசிகனான எனது மகனுக்காக நேரம் செலவிட்டு வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து வீடியோ பார்த்து என் மகன் மிகவும் உற்சாகமாகிவிட்டான். அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான வெற்றிக்கும் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.