இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘தோனிக்கு கோஹ்லி சொன்ன வாழ்த்து’.. நம்ம தல எப்பவுமே கெத்து தான்!

தோனி பிறந்த நாளுக்கு கேப்டன் கோஹ்லி தெரிவித்த வாழ்த்து ட்வீட், இந்திய ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ட்வீட் ஆக முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்திய அளவில் ட்விட்டர் வலைத்தளத்தில் அதிக வரவேற்பு பெற்று டாப் 10 கிரிக்கெட் பிரலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கேப்டன் கோஹ்லி முதலிடம் பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தில முன்னாள் கேப்டன் தோனி இடம்பிடித்தார்.

டாப் 10 கிரிக்கெட் பிரபலங்கள்: கோஹ்லி, தோனி, ரோகித், சச்சின், சேவக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், பாண்ட்யா, ஜடேஜா மற்றும் பும்ரா.

இந்திய அளவில் தோனி பிறந்த நாளுக்கு கேப்டன் கோஹ்லி தெரிவித்த வாழ்த்து குறித்த ட்விட்டர் பதிவு ரசிகர்களை அதிகமாக கவர்ந்த பதிவாக முதலிடம் பிடித்துள்ளது.

இதில் கோஹ்லி வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‘நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உண்மையான அர்த்தத்தை வெகுசிலர் தான் புரிந்து கொண்டிருப்பர். உங்களது நட்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. எங்களுக்கு எல்லாம் பெரியண்ணா ஆக நீங்கள் இருந்தீர்கள், நீங்கள் எப்போதும் எனது கேப்டன் தான். பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி,’ என தெரிவித்து இருந்தார்.

கோஹ்லியின் இந்த வாழ்த்து பதிவு, 2019ல் இந்திய விளையாட்டு துறையில் அதிக லைக் மற்றும் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக சாதனை படைத்துள்ளது. இந்த பதிவு தற்போது வரை ரசிகர்கள் 45,500க்கும் மேற்பட்ட முறை ரீ-ட்வீட்’செய்துள்ளனர். 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி கடந்த 5 மாதங்களாக இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். இருப்பினும், இந்த ஆண்டு விளையாட்டு வீரர்களில் அதிகம் ட்ரெண்ட் ஆனவர்கள் பட்டியலில் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

தோனி இந்திய அணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவ்வாறு தான் எப்பவும் டாப் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.