இப்படியே பேசிகிட்டு இருந்தா காணா போயிடுவீங்க தம்பி; ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பயிற்சியாளர் !!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பண்டியாவை கடுமையாக விமர்சித்த விராட் கோலியின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா !!

கடந்த இரண்டு வருடங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா வின் மீது முழு நம்பிக்கை வைத்து 2021 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தேர்ந்தெடுத்தது, ஆனால் அந்த உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடித்து விட்டார் என்றே கூறலாம்.

அந்தளவிற்கு ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார், மேலும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி மோசமாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் பாதியிலேயே வெளியேறியது, இதற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் முழுமையான பங்களிப்பு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியா இந்த விமர்சனத்தை மறுக்கும் வகையில் உலக கோப்பை தொடரில் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக கருத்தில்கொண்டுதான் தேர்வாளர்கள் தேர்வு செய்தனர் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த பேச்சு தேவையில்லாத ஒன்று என்று விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், உடற் தகுதி இல்லாத ஒரு நபரை உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எடுத்ததற்காக இந்திய அணியின் தேர்வாளர்கள் குழு மற்றும் இந்திய அணியின் நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் ஹார்திக் பாண்டியா நன்றி செலுத்த வேண்டும், அதை விட்டுவிட்டு பக்குவம் இல்லாத நபர் போன்று ஹர்திக் பாண்டியா பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியாவை ராஜ்குமார் சர்மா கடுமையாக சாடியுள்ளார்.

ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் குழு ஹர்திக் பாண்டியாவை பேட்டிங்கிர்க்காக மட்டுமே தேர்ந்தெடுத்தது என்று இந்திய அணித் தேர்வாளர் நிகில்சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.