ரவி சாஸ்திரி 2018 ஆம் ஆண்டு தற்பொழுது உள்ள இந்திய அணி என்னை பொருத்தவரையில் மிகச்சிறந்த டெஸ்ட் அணி என்று கூறியிருந்தார். அவர் கூறியதை அந்த வேலையில் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் அவர் கூறியதைப் போலவே கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்திய அணியின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
செல்லும் இடமெல்லாம் வெற்றி பெற்று வாழக்கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து தொடர்ச்சியாக இரண்டு முறை வீழ்த்தியது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. நன்றாக செயல்பட்டு விளையாடி வந்த இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தயாராக இருக்கிறது.
என்னைப் பொருத்தவரையில் தற்பொழுது உள்ள இந்திய அணி தான் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி
தினேஷ் கார்த்திக் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், என்னைப் பொறுத்தவரையில் தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணி மிகவும் பலமான அணியாக திகழ்கிறது. 1971 ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை நான் கண்டதில்லை.
ஆனாலும் நான் உறுதியாக கூறுவேன் தற்போது விராட் கோலி தலைமையில் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த அணி என்றும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட அனைத்து தகுதியும் உள்ள அணியாக இந்திய அணி இருக்கிறது.
மேலும் பேசிய அவர் இந்திய அணியின் பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்து விதத்திலும் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று இறுதியாக தினேஷ் கார்த்திக் கூறி முடித்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் அசத்துவார்கள்
நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெண்டன் மெக்கல்லம், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் என்னை பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக உலக அணிகளை சாமர்த்தியமாக கையாண்டு வருகின்றனர். இந்திய அணியில் எப்பொழுதும் நல்ல தரமான பந்துவீச்சாளர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
ஒரு அணியின் பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் சிறப்பாக விளையாட வேண்டும். அதன்படி பார்க்கையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு பக்கம் அசத்த மறுபக்கம் சுழற்பந்து வீச்சாளர்களும் அசத்தி வருகின்றனர். எனவே இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது என்றும் தற்பொழுது உள்ள இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது என்றும் பிரண்டன் மெக்கல்லம் கூறி முடித்தார்.