இங்கிலாந்து தொடறில் விராட் ஆடுவது சந்தேகம்!! இந்தியாவிற்கு பின்னடைவு!!

இந்திய கிரிக்கெட் கேப்டன், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட செல்வதால், ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாது என தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம் என கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டி முடிந்த உடன் ஜூன் மாதத்தில் இந்தியாவில் நடைப்பெறும் ஆப்கானுக்கு எதிரான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் மற்றும் அயர்லாந்தில் அந்நாட்டுக்கு எதிரான 2 டி20 போட்டி நடைப்பெற உள்ளது.

India’s captain Virat Kohli during the nets practice ahead of 4th Test match against England held at Wankhade Stadium, Churchgate.

கவுண்டி கிரிக்கெட்:
ஆனால் கோலி ஆப்கன், அயர்லாந்துக்கு எதிரான போட்டியை விலக்கிய கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதாக கூறியிருந்தார்.

காயம்;
இந்நிலையில் கோலி உடற்பயிற்சி செய்யும் போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவருக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பெரிய அளவிலான சிகிச்சை தேவையில்லை, ஆனால் ஓய்வு தேவை என பிசிசிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம் என தெரிகிறது

India’s captain Virat Kohli walks back to pavilion after being dismissed during the second day of a third test cricket match against Sri Lanka in New Delhi, India, Sunday, Dec. 3, 2017. (AP Photo/Altaf Qadri)

இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கிரேம் ஸ்வான். இவர் இங்கிலாந்து அணிக்காக 60 டெஸ்டில் 255 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது இவர் மற்றும் மோன்டி பெனாசர் ஆகியோரின் பந்து வீச்சால் முதன்முறையாக இந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியா இதற்கு முன் இங்கிலாந்து சென்று விளையாடும்போது 0-4, 1-3 எனத் தொடரை இழந்துள்ளது. ஆனால் ஜூன் மாதம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘இந்திய அணிக்கு இது சிறந்த தொடராக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் இந்தியா மோசமாக விளையாடியுள்ளது என்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. பாகிஸ்தான் இங்கிலாந்து வந்தபோது, அந்த அணியை விட இந்தியா சிறந்த அணியாக இருந்தது. ஆனால், யாசீர் ஷாவால் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.. ஆனால் பேட்டிங்கில் இந்தியா சிறந்த அணியாக இருக்கிறது.

கடந்த முறை ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்தியாவை துவம்சம் செய்தனர். அதேபோல் மொயீன் அலி சிறப்பாக பந்து வீசினார். தற்போது, இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட் உள்ளனர். தற்போதும் அவர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் மொயீன் அலி பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால் ஸ்பின்னர் பகுதியில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

விராட் கோலியை ஆண்டர்சனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில்தான் எல்லாமே உள்ளது. கடந்த முறை விராட் கோலியை தொடர்ச்சியாக வெளியேற்றினார். தற்போது விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். அவர் சிறப்பாக சென்றால், இந்த அணிக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.

Editor:

This website uses cookies.