இவருடன் பேட்டிங் செய்யும்பொழுது ரன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் சூரியகுமார் யாதவ்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தனது சிறந்த பார்மை டி20 உலக கோப்பைக்கு பிறகும் தொடர்ந்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக விளையாடி வெறும் 51 பந்தில் 111 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
சர்வதேச டி20 தொடரில் போட்டிகளில் சூரியகுமார் யாதவ் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இரண்டுமே இந்திய நாட்டிற்கு வெளியே வந்திருப்பது கூடுதல் சிறப்பு. சமீப காலமாக விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்து பல போட்டிகளை வென்று தந்திருக்கின்றார். உலக கோப்பையிலும் அப்படியான நிகழ்வை நாம் பார்த்து இருக்கிறோம். அத்துடன் ஹர்திக் பாண்டியா உடன் ஐபிஎல் போட்டிகளில் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரில் யார் அதிவேகமாக ஓடக்கூடியவர்கள்? யாருடன் விளையாடும் பொழுது மிகவும் வேகமாகவும் அதிக நேரமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்? என கேட்கப்பட்ட கேள்விக்கு அசத்தலாக பதில் அளித்துகிறார்கள் சூரியகுமார்.
“நான் விராட் கோலி உடன் விளையாடும்போது மிகவும் என்ஜாய் செய்வேன். ஹர்திக் பாண்டியா உடன் விளையாடும் பொழுது அவர் மட்டுமே அடித்துக் கொண்டிருப்பார். விராட் கோலி சரியான நேரத்தில் எனக்கு ரன் எடுத்துக் கொடுப்பார். என்னால் நன்றாக விளையாட முடியும்.
ஆனால் விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும்பொழுது ரன் எடுப்பதற்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை ஒரே எனர்ஜியில் இருப்பார். நான் சில நேரங்களில் போதும் என்று நின்று விடுவேன். ஆனால் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மறுபக்கம் ஓடி வந்துவிடுவார். நிச்சயம் விராட் கோலியுடன் விளையாடும் பொழுது தான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதிலும் வேகமாகவும் ஓட வேண்டும்.” என்றார்.