ரோகித் எங்கே? இந்திய வீரர்களுடன் விராட்கோலி எடுத்த செல்ஃபீயால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!!

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக இந்திய வீரர்களுடன் விராட் கோலி செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதில் ரோகித் சர்மா இல்லாததால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ரோஹித் எங்கே? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியோடு தோல்வியை தழுவி வெளியேறிய பிறகு விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதேபோல் விராட் கோலியை மாற்றிவிட்டு ரோகித் சர்மாவிற்கு லிமிடெட் ஒவ்வொரு போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கொடுக்கலாம் என்ற விவாதங்களும் எழுந்தன.

இதற்கிடையில் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவருக்குமிடையே அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.

உலக கோப்பை தொடரின்போது ரோகித் சர்மா கூறிய கருத்திற்கு விராட் கோலி செவி சாய்க்கவில்லை. இதுதான் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவிற்கு முக்கிய காரணம் எனவும் பேசப்பட்டன. ஆனால், இதில் குறுக்கிட்ட பிசிசிஐ, நீங்கள் சொல்வதை போல அப்படி எந்தவொரு பிளவும் இதுவரை நாங்கள் அணியில் காணவில்லை என தெரிவித்தனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய விராட் கோலி, “அணியில் எந்த ஒரு பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதால் தான் இந்திய அணி மிகச் சிறந்த அணியாக இருந்து வருகிறது” என்பதை கூறினார்.

இப்படிக் கூறிவிட்டு, மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக விமான நிலையத்தில் விராட் கோலி இந்திய வீரர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அவர் எடுத்த செல்பியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இதை பிடித்துக்கொண்ட ரசிகர்கள், இதில் ரோகித் சர்மா எங்கே? வேண்டுமென்றே அவரை விட்டுவிட்டு செல்பி எடுத்துள்ளீர்கள். ஆகவே இருவருக்கும் இடையே பிளவு இருப்பது உண்மைதான் போல என்றவாறு பேசத் தொடங்கிவிட்டனர்.

ஒவ்வொருமுறையும் இருவருக்கும் இடையே எந்த ஒரு பிளவும் இல்லை எனக் கூறி முடிப்பதற்குள் அவர்களது செயலே பிளவு இருப்பது போல காட்டிவிடுகிறது. இந்த சர்ச்சையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது.

அதேநேரம் ரோகித் சர்மா, ஷிகர் தவானுடன் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.