உலக கோப்பைத் தொடரின் போது ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்ற பிறகும் அணியில் மீண்டும் ஆட விருப்பம் தெரிவித்தது, அதற்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தான் கேட்டதற்கான முழு காரணத்தை விவரித்த டிவில்லியர்ஸ் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. லீக் சுற்றின் முதல் மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய பிறகு, 2018 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ், அணி நிர்வாகம் வேண்டும் என்று முடிவு செய்தால் மீண்டும் ஆடத் தயார் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அணியைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் ஓய்வு பெற்ற பிறகு தற்போது மீண்டும் ஆட வருகிறேன் என கூறுவது பணத்திற்காகவும், தன் சுயநலத்திற்காக செய்யும் விதமாக இருக்கிறது என பலரும் விமர்சித்தனர்.
இதற்கு நேற்று ட்விட்டரில் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலும் பதில் அளித்த டிவில்லியர்ஸ், “உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக, எனது சிறுவயது நண்பரும் தற்போதைய அணியின் கேப்டனாக டு பிளசிஸ் இடம் போன் மூலம் பேசி, உலக கோப்பை தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன். வேண்டும் என்றால் என்னை பரிசீலனை செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் நான் ஆட தயாராக என்று நட்பு ரீதியாக கூறினேன். அவரும் தேவைப்படுகையில் கட்டாயம் அணுகுவோம் என்றார்.
தொடரின்போது அடுத்தடுத்து தோல்வியை தழுவியது பிறகும் நான் அவரிடம் மீண்டும் வருவது குறித்து கேட்டேன் இல்லை. தற்போது அவசியம் இல்லை சமாளிக்கும் நிலையிலேயே இருக்கிறது என்றார். இதில் சுயநலம், பணத்தின் நோக்கம் எங்கு இருக்கிறது. எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே ஓய்வு பெற்றேன் என்றார்.
இதற்கு அவரது நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் கேப்டனுமான விராத் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், இப்படி உனக்கு நடந்தது வருத்தமளிக்கிறது. நாங்கள் உன்னை நம்புகிறோம். தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மற்றவர்கள் தலையிடுவது சரியல்ல. உனக்காக நானும் அனுஷ்காவும் எப்போதும் இருப்போம். கவலை வேண்டாம் என்றார்.