இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ”இரண்டு நாள்” செமி பைனல் போட்டி இன்று(ஜுலை.10) முடிவடைந்தது. ஆடுகளத்தின் தன்மையாலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் சாதுரியத்தாலும் இந்தியா தோற்கடிக்கப்பட்டது.
இந்தியாவில் நம்பர் ஒன், பேட்ஸ்மேன் நம்பர் 2 பேட்ஸ்மேன் ,உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர், உலகின் அற்புதமான ஆல்ரவுண்டர், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என அனைவர் இருந்தும் ஒரு சுமாரான அணியை தோற்கடிக்க முடியவில்லை.
ஒரு வழியாக அப்படியும் இப்படியும் புரட்டிக் கொண்டு ஆடி இருந்த இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தொடரை விட்டு வெளியேறியது. அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 77 ரன்களும் மகேந்திர சிங் தோனி 50 ரன்களும் விளாசினர்.
தோல்வியடைந்த பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கண் கலங்கியதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இந்நிலையில் மைதானத்தை விட்டு தனது ஹோட்டல் அறைக்கு சென்ற விராட் கோலி, அரங்கம் முழுவதும் நிறைந்து, ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்காக சப்போர்ட் ரசிகர்களை, பாராட்ட்டியும் தனது துக்கத்தை அவர்களிடமும் பகிர்ந்தும் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ல் இந்த தோல்வி குறித்தும் தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவு செய்துள்ளதாவது….
முதலில் நான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். பெரிதளவில் எங்களுக்கு அவர்கள் சப்போர்ட் செய்தனர். இந்த தொடர் எங்களுக்கு உணர்வுபூர்வமானதாகவும், நினைவில் நிற்கும் வகையிலும் உங்களால்தான் அமைந்துள்ளது.
உங்களது அன்பு எங்களால் உணரப்பட்ட.து நாங்கள் அதனை உணர்ந்தோம். தற்போது நீங்கள் என்ன உணர்கிறீர்களோ, எவ்வளவு சோகமாக இருக்கிறீர்களோ… அதே போல் தான் நாங்களும் சோகமாக இருக்கிறோம். எங்களுக்கும் அதே எமோஷன்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களால் முடிந்தவரை போரிட்டோம் முடியவில்லை. நன்றி!! ஜெய் ஹிந்த்!! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி