ஸ்டீவன் ஸ்மித் மற்றும் விராட் கோலி! இவர்களில் மிகச் சிறந்த ஒரு நாள் வீரர் யார்? மீண்டும் விராட் கோலியை சீண்டிய கௌதம் காம்பீர்!

ஸ்டீவன் ஸ்மித் மற்றும் விராட் கோலி! இவர்களில் மிகச் சிறந்த ஒரு நாள் வீரர் யார்? மீண்டும் விராட் கோலியை சீண்டிய கௌதம் காம்பீர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்திய அணி தனது மானத்தை இழக்க இன்னொரு போட்டி இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது மானத்தை மீட்கலாம்.

எப்போதும் போல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போது ஒரு பக்கம் விராட் கோலியும் மறுபக்கம் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கில் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த முறை ஸ்டீவன் ஸ்மித் உச்சாணிக் கொம்பில் ஏறி மிகச் சிறப்பாக ஆடி விட்டார். தான் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் 60 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியின் நிலைகுலைய வைத்து விட்டார்.

ஆனால் விராட் கோலி முதல் போட்டியில் சொற்ப ரன்களிலும் இரண்டாவது போட்டியில் சதத்தை நழுவ விட்டு தனது விக்கெட்டை இழந்து விட்டார். இப்படி இருக்கையில் எப்போதும் போல் விராட் கோலியிடம் வம்பிழுக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் விராட் கோலியை ஸ்டீவன் ஸ்மித் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருக்கிறார்.

கவுதம் காம்பீர் கூறுகையில் “ஸ்டீவன் ஸ்மித் அடித்த 2 சதங்களும் அட்டகாசமான சதங்களாகும். விராட் கோலியின் ஆட்டத்திற்கு வெகு தூரத்தில் இல்லை நாம் விராட் கோலியை மிகச்சிறந்த ஒரு நாள் வீரர் என்று கூறுகிறோம். அதேபோல்தான் ஸ்டீவன் ஸ்மித் ஆடிக் கொண்டிருக்கிறார்.

நடைப்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து 60 பந்துகளில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை,விராட் கோலியும் சிறந்த பேட்ஸ்மேன் தான் ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அவரை விட மிகச் சிறப்பாக ஆடியுள்ளார் ஸ்டீவன் ஸ்மித். இவர் இப்படி ஆடினால் இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி விடும் இந்திய பந்துவீச்சாளர்கள் இவரது விக்கெட்டை வீழ்த்த வெகு சீக்கிரத்தில் வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்

Prabhu Soundar:

This website uses cookies.