விராட் கோலி வியக்கத்தக்க ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இரண்டு முக்கியமான வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இருந்து வருகிறார்கள். கடந்த பல வருடங்களாகவே இருவரும் போட்டி போட்டி கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். அதனால்தான் இருவரையும் ரன் மிஷன் என ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஐசிசி தரவரிசையிலும் இருவரும் முன்னிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து ஸ்டீவ் ஸ்மித், மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆமாம், கோலி வியக்கதக்க வீரர். அவரது பேட்டிங் வரிசை அவரைப் பற்றி பேசும். மூன்றுவிதமான ஆட்டங்களிலும் அவர் நம்பமுடியாத வீரராக திகழ்கிறார். மேலும் அவர் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான சாதனைகளை உடைத்துவிட்டார்.
அவர் பல சாதனைகளை முறியடிப்பதை பல ஆண்டுகளாக நான் பார்த்து வருகின்றேன். அவர் ரன்களை பெறுவதில் பெரும் பசியோடு இருக்கிறார். அப்படி அவர் ரன் குவிப்பதை நிறுத்தவேயில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ரன்களை பெறுவதை தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அது எங்களுக்கு நல்லதாக இருக்கும்”
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
அதிக ரன்கள் எடுக்கும் வேட்கை அவரிடம் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் மட்டும் அவர் ரன்கள் எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். தவிரவும் இந்திய டெஸ்ட் அணியை உலகின் நெ. 1 அணியாக மாற்றியுள்ளார். உடற்தகுதி முதற்கொண்டு அனைத்திலும் ஒரு தரத்தை அவர் பின்பற்றுகிறார். அணியை மிக அருமையாக வழிநடத்துகிறார் என்று கூறியுள்ளார். என்று அவர் கூறியிருக்கிறார்.