இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் தெரிவித்ததாவது கேஎல் ராகுல் இந்த வெற்றிக்கு நிச்சயமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது பலத்தை நிரூபித்து அதிரடி வெற்றி பெற்றது இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தற்போது பேசுபொருளாக மாறிவிட்டார். சமீபகாலமாக தனது திறமையை வெளிப்படுத்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கே எல் ராகுல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை, இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கேஎல் ராகுல் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியான அரை சதத்தை கடந்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளுக்கு 108 ரன்கள் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் என்று அனைவராலும் போற்றப்பட்டார்.
இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது, கேஎல் ராகுலின் இந்த கம்பேக்கிற்கு இந்திய அணி கேப்டன் விராட்கோலி தான் காரணம், ஏனென்றால் ஒரு வீரரை தட்டிக் கொடுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கி அவரை சிறப்பாக செயல்பட வைத்துள்ளார். மேலும் விராட் கோலிக்கு பிடித்தமான வீரராக கேஎல் ராகுல் தான் போல என்று தெரிவித்த அவர் கே எல் ராகுலின் இந்த வெற்றிக்குக் காரணம் இந்திய அணி கேப்டன் விராட்கோலி தான் என்றும் விரேந்தர் சேவாக் தெரிவித்தார்.