சூர்யகுமார் யாதவ நம்புறது முட்டாள்தனம்… மிடில் ஆர்டரில் இவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுங்க; அட்வைஸ் கொடுக்கும் சேவாக் !!

சூர்யகுமார் யாதவ நம்புறது முட்டாள்தனம்… மிடில் ஆர்டரில் இவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுங்க; அட்வைஸ் கொடுக்கும் சேவாக்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 போட்டிகளை கொண்ட இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து விரேந்திர சேவாக் பேசுகையில், “இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுக்க தேவை என்பதே எனது கருத்து. சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. அவரது பலம் டி.20 போட்டிகள் தான், டி.20 போட்டிகளில் அவர் மிக சிறந்த வீரர் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுலை விளையாட வைப்பதே சரியானதாக இருக்கும். இஷான் கிஷன் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்தாக வேண்டும், அதே போன்று தான் ஸ்ரேயஸ் ஐயரையும் அணியில் இருந்து நீக்கவே முடியாத அளவிற்கு அவர் தொடர்ச்சியாக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல் போன்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்காக எதுவுமே செய்யவில்லை என்பதை மறுக்க முடியாது. விராட் கோலி மூன்றாவது இடத்திலும், ஸ்ரேயஸ் ஐயர் நான்காவது இடத்திலும், அதன்பின் இஷான் கிஷன், கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பதே சரியானதாக இருக்கும். சூர்யகுமார் யாதவ் தனது வாய்பிற்காக காத்திருப்பதே சரியாகும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.