ரோஹித் சர்மாவின் காயத்தை வைத்து என்ன விளையாட்டு இது? கடுப்பான விரேந்திர சேவாக்!
இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறதே துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட இருக்கிறது 4 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இவை அனைத்தும் நடக்க இருக்கிறது
இதற்கான மூன்று விதமான அணியும் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து அன்னைக்கும் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே மூன்று விதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் ரோஹித் சர்மாவின் பெயர் ஒரு அணியில் கூட இடம்பெறவில்லை
இந்நிலையில் இந்த காயம் குறித்து மிகவும் கடுப்பில் பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் அவர் கூறுகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிசியோ அவருக்கு காயம் என்பதை முதலில் கூறினார் என்றால் அவரிடம் தான் விசாரிக்க வேண்டும் அதே நேரத்தில் அவர் எத்தனை நாட்களில் உடல் தகுதியை அடைவார் என்று அவர் கூறியிருக்க வேண்டும்
ஆனால் பல காரணங்களை மனதில் வைத்து அந்த அணி நிர்வாகம் சரியான காயத்தை தெரிவிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய வீரர் என்றால் கண்டிப்பாக அவரை நன்றாக பார்த்து இருக்க வேண்டும் காயத்தை இப்படி மறைத்து வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் தோள்பட்டையில் எனக்கு இதே போன்ற ஒரு காயம் இருந்தது
ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒரு தசைநார்கள் கிழிந்து இருந்தது, உடனடியாக எனக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை செய்யாமல் நான் விளையாடி இருக்கலாம்.
ஆனால் உடனடியாக பிசிசிஐ என்னை அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதித்தனர். அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கையில் நான் உலக கோப்பை தொடரில் பங்கேற்று இருக்கமுடியாது அதேபோல்தான் ரோகித் சர்மாவிற்கு அந்த காயம் ஏற்பட்டிருக்கிறது .
பிசியோ, பயிற்சியாளர்கள் என யாருமே அவரது காயம் குறித்து சரியான விளக்கத்தைக் கூற மறுக்கின்றனர் ரோகித் ஷர்மாவை வைத்து யார் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் என்பது குறித்து நான் கவலையில் இருக்கிறேன் என்று கடுப்பாக தெரிவித்துள்ளார் விரேந்தர் சேவாக்.