எனது அதிரடி ஆட்டத்திற்கு இவர் தான் முக்கிய காரணம்; மிகப்பெரும் ரகசியத்தை உடைத்துள்ளார் சேவாக் !!

எனது அதிரடி ஆட்டத்திற்கு இவர் தான் முக்கிய காரணம்; மிகப்பெரும் ரகசியத்தை உடைத்துள்ளார் சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் சேவாக். சர்வதேச கிரிக்கெட்டில் எந்த பவுலராக இருந்தாலும் அசராமல் துவக்கம் முதலே அதிரடியாக ரன்கள் சேர்ப்பதில் கில்லாடி. இந்நிலையில் தனது அதிரடி பேட்டிங்கிற்கு உத்வேகமாக அமைந்தது ராமாயணத்தில் வரும் அங்கதன் என்ற கதாபாத்திரம் என சேவாக் தனது ட்விட்டர் பக்கம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சேவாக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இங்கிருந்து தான் எனது பேட்டிங் உத்வேகத்தை எடுத்துக்கொண்டேன். அங்கதன் ஜி ராக்ஸ்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராமாயணத்தில் போரைத் தவிர்க்க, ராவணனின் சபைக்கு ராமர் அங்கதனை அனுப்பினார். அங்கு ராவணணின் தலைகனைத்தை உடைக்க, அங்கதன் சபையோருக்கு வெளிப்படையாக சவால் விடுத்தார். அது என்னவென்றால், தரையில் உள்ள தனது பாதத்தை யாராவது தூக்கிவிட்டால் ராமன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறுவார் என்றார். ஆனால் அங்கிருந்த யாராலும் அங்கதனின் காலை தூக்க முடியவில்லை.

COLOMBO, SRI LANKA: Indian cricketer Virender Sehwag (R) is watched by Sri Lankan wicketkeeper Kumar Sangakkara as he plays a stroke during the Asia Cup match between India and Sri Lanka at The R.Premadasa Stadium in Colombo, 27 July 2004. India are currently 102 runs for the loss of one wicket in the 23rd over. AFP PHOTO/Rob ELLIOTT (Photo credit should read ROB ELLIOTT/AFP/Getty Images)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதம் அடித்த ஒரே இந்தியர் சேவாக் தான். ஒரு முச்சதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், இரண்டாவது முச்சதம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராகவும் சேவாக் அடித்தார். இந்திய அணிக்காக 251 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள சேவாக் 8273 ரன்கள் அடித்துள்ளார். 104 டெஸ்ட் போட்டியில் 8586 ரன்கள் அடித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.