50-ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் அட்டவணையை வெளியிட்டபோது, அந்த நிகழ்ச்சியில் பெங்கேற்று இந்த நான்கு அணிகள் தான் உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று தனது கணிப்பாய் கூறியுள்ளார் வீரேந்திர சேவாக்.
50-ஓவர் உலகக் கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது என்பது உலகறிந்த விஷயம். பலரும் அவளோடு எதிர்பார்த்திருந்தது எப்போது போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்பதுதான்.
உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ மற்றும் ஐசிசி இருதரப்பும் இணைந்து இன்று மும்பையில் வெளியிட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முத்தையா முரளிதரன் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகிய இரு ஜாம்பவான்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கௌரவ் கபூர் தொகுத்து வழங்கினார்.
அப்போது வீரேந்திர சேவாக்-இடம் உலகக்கோப்பை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினார் கௌரவ் கபூர். குறிப்பாக, ‘எந்த நான்கு அணிகள் உலகக்கோப்பை செமி பைனல் வரை வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?’ எனும் கேள்வியையும் முன் வைத்தார். இதற்கு பதில் கூறிய சேவாக்,
“முதலில் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அகமதாபாத் மைதானத்தில் முதல் ஆளாக சென்று பார்ப்பேன். அதற்கு முன்னர் சமூக வலைதளங்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்று வருகிறது. எனது நண்பர் சோயிப் அக்தர் உடன் வார்த்தைச் சண்டை இடுவதற்கும் காத்திருக்கிறேன்.” என்றார்.
அதன்பிறகு, எந்த நான்கு அணிகள் செமி பைனல் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்? எனும் கேள்விக்கு பதில் அளித்த சேவாக், “எந்தவித சந்தேகமும் இன்றி இந்திய அணி கண்டிப்பாக அரையிறுதி சுற்றுக்கு வந்துவிடும். அடுத்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியில் நான் கவனம் செலுத்துகிறேன். அவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அவர்களும் தகுதி பெறுவார்கள். இந்த நான்கு அணிகள் தான் என்னுடைய கணிப்பு.” என்று கூறினார்.