இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்காவது ரன்கள் சேர்க்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியை பார்த்தோமானால் அவர்களது பந்துவீச்சாளர்கள் 50 முதல் 60 ரன்கள் சேர்த்து விடுகின்றனர். ஆனால் நமது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஏற்ற இறக்கங்களில் அவுட் ஆகி விடுகின்றனர். 20 ரன்கள் கூட சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். இந்த வித்தியாசம் தான் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்து விட்டது என்று விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து நீண்ட வெற்றி தாகத்தை தணித்துக்கொண்டது ஆஸ்திரேலிய அணி.
மொத்தமே 15 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் போராடாமல் தாரை வார்த்துக்கொடுத்து தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்த ஆண்டில் வெளிநாடுகளில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெறும் 7-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டி தோல்வி என்பது 6 மட்டுமே கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தது. அதை இப்போதுள்ள இந்திய அணி முறியடித்து சாதனை படைத்துவிட்டது.
அதேசமயம், இந்த ஆண்டு டர்பன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது, அதன்பின் எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவில்லை.
ஏறக்குறைய 8 டெஸ்ட் போட்டிகளாக வெற்றியே இல்லாமல் வறண்டு, துவண்டு, சோர்வடைந்து கிடந்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி நீர்பாய்ச்சி புதிய தெம்பை அளித்திருக்கிறது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய நாதன் லயன் ஆட்டநாயன் விருது பெற்றார்.
அதேசமயம், இந்திய அணியும் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டது. தொடக்க வீரர்கள் சரியில்லாமல் ஆடியதால், கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் நடுவரிசை வீரர்களுக்கே சுமை கூடியது. குறிப்பாக சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே, விராட் கோலி, ஆகியோரே கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் பெரும்பாலும் சுமையை சுமந்தனர்.
அணியில் விராட் கோலிக்கு அடுத்தார்போல், நின்று நிலைத்து பேட் செய்யக்கூடிய வீரர்கள் இல்லாதது தோல்விக்கு முக்கியக்காரணமாகும், ரிஷப் பந்த் இளம் வீரராகவும், பொறுமையாக களத்தில் நிற்க இயல்பில்லாதவராக இருக்கிறார். ஆதலால், அடுத்த 2 டெஸ்ட் போட்டியில் பர்தீவ் படேலை களமிறங்கி இந்திய அணி சோதிக்கலாம். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த காலத்தில் அவரின் அனுபவம், பேட்டிங் அனுபவம் ஆகியவை இந்திய அணிக்கு சிறப்புச் சேர்க்கும்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸி்ல் பெற்ற முன்னிலையையும் சேர்த்து இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. களத்தில் விஹாரி 24 ரன்களுடனும், ரிஷப் பந்த் 9 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.விஹாரி கூடுதலாக 4 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டார் பந்துவீச்சில் மிட்விக்கெட்டில் ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார்.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
ஸ்டார்க் வீசிய 55-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து உமேஷ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
55-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் தனது பங்கிற்கு டெய்லண்டர்கள் பும்ரா, இசாந்த் சர்மாவை டக்அவுட்டில் அனுப்பினார்.56 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.வ்