வெற்றிக்கு இந்த இருவர்தான் காரணம்: செம்ம ட்வீட் போட்ட சேவக

இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் தனது சொந்த பாணியில், புதன்கிழமை நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா நியூசிலாந்தை கடந்து செல்லவும், 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெறவும் உதவியதற்காக ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோரை பாராட்டியுள்ளார். ரோஹித் மற்றும் ஷமியின் ஆட்டத்தை விவரிக்கும் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் ட்விட் செய்ததாவது: “நாம் தெய்வங்கள் என்று தோன்றுகிறது, ரோஹித் ஷர்மா தனக்கு பொருத்தமற்ற பணிகளை சாத்தியமாக்கிய விதத்தில் செய்து முடிக்கிறார். ஆனால் 4 பந்துகளில் 2 ரன்களைக் காப்பது ஷமியின் நம்பமுடியாத முயற்சி #NZvIND. இந்த வெற்றி மறக்கமுடியாதது” என்று பதிவிட்டார்.”

 

 

 

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. வில்லியம்சன் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து 95 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர் கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய சூழலில் டெய்லர் அவுட்டானார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. இதில் ரோகித் சர்மா கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

போட்டி முடிந்து பேட்டியளித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ” எங்கள் அணிக்கு சூப்பா் ஓவா்கள் வெற்றிகரமாக அமைவதில்லை. வழக்கமான ஆட்ட நேரத்திலேயே நாங்கள் வென்றிருக்க வேண்டும். ஆட்டம் சமனில் முடிந்தது. சிறப்பான ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் இந்தியா மீண்டும் தனது அனுபவத்தை நிரூபித்தது. நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். சிறப்பாக ஆடியும் வெற்றியை தவற விட்டது, அதிருப்தியாக உள்ளது. வெற்றி இலக்கை அடைய முடியாதது வேதனை தருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளை விட ஹாமில்டனில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்” என்றார் அவர்

Mohamed:

This website uses cookies.