முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், தனது அதிரடியான பேட்டிங்கிற்கு உத்வேகமாக அமைந்தது இவர் தான என ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக ஆடக்கூடிய பழக்கத்தை கொண்டவர். தனது அதிரடியான ஆட்டத்திற்கு இதிகாச புராணங்களில் வரும் வானர சேனையின் அரசனான அங்கதன்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னனாக வலம் வந்தவர் விரேந்தர் சேவக். சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு பந்து வீச்சாளராக இருந்தாலும், அந்த பந்துவீச்சாளரை முதல் பந்து முதல் அடிக்க தொடங்கி விடுவார். மூன்று விதமான போட்டிகளிலும் ஒரே மாதிரியாக அடித்து ஆடுவதில் கில்லாடி.
இந்நிலையில் இதுபோன்ற அதிரடியான ஆட்டத்திற்கு ராமாயணத்தில் வரும் வானர சேனைகளின் அரசனாக இருந்த வரும் அங்கதன் தான் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்…
‘இங்கிருந்துதான் எனது பேட்டிங்கின் உத்வேகத்தை எடுத்துக் கொண்டேன்,’ ‘அங்கதன் ராக்ஸ்’ என்று தெரிவித்துள்ளார்.
ராமாயணத்தில் இராவணனுக்கு எதிராக வரும் போரைத் தவிர்க்க, ராமனுக்காக ராவணன் அரசவைக்கு செல்பவர்தான் அங்கதன். இவர் வானர சேனைகளின் முன்னால் அரசன் ஆவார். அங்கு ராவணனின் அரசவையில் சபையோருக்கு வெளிப்படையாக ஒரு சவால் விடுவார். அது என்னவென்றால்…
‘தரையில் உள்ள தனது கால் பாதத்தை தூக்கிவிட்டால், ராமன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைவார் என்று தெரிவிப்பார்.’ ஆனால் அங்கிருந்த யாராலும் அவரது பாதத்தை தூக்க முடியாது. இந்த பதிவை வெளியிட்டு தான் இப்படிக் கூறியுள்ளார் வீரேந்தர் சேவாக்.
விரேந்தர் சேவாக் இந்திய கிரிக்கெட் அணிக்காக கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆடியவ.ர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர். 104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்களும், 251 ஒருநாள் போட்டிகளில் 8271 ரன்களும் குவித்துள்ளார்.